tamilnadu

img

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா: காணொலி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்த கோரிக்கை

சென்னை, ஏப்.20- சென்னையில் பணிபுரியும்  பத்திரிகையா ளர்களுக்கு இருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்தத்  தொற்றி ருந்து பத்திரிகையாளர் களை பாது காக்க காணொளி சந்திப்பு மூலமாகவும் டிஜிட்டல் செய்தியாளர் சந்திப்பு மற்றும் செய்தியை அறிக்கை மூலமாக தமிழக அரசு  செய்தி நிறுவனங்களுக்கு தரவேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இது குறித்து தமிழ்நாடு பத்திரிகையா ளர்கள் சங்க (டி.யூ.ஜே.) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியி ட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா குறித்து தினசரி செய்தி  சேகரிப்பு பணியில் ஈடுபடும் பத்திரிகையா ளர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி யுள்ளது. சில இடங்களில் வாடகை குடியிருப்பில் இருந்துவரும் பத்திரிகையாளர்களை வீட்டு உரிமையாளர்கள் வீட்டை காலிசெய்யும்படி நிர்பந்தம் கொடுத்து வருகின்றனர். சில  இடங்களில் பத்திரிகை யாளர்கள் லாட்ஜ்களி லும், மேன்சன்களிலும் தங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில அச்சு மற்றும் காட்சி ஊடக ஆசிரி யர்குழு மற்றும் செய்திபிரிவில்  பணியாற்று பவர்கள் 3 அடி இடைவெளி விட்டு அமரந்து பணிபுரியும் ஏற்பாடுகள்கூட நிறுவனங்கள் செய்துதரவில்லை என்ற அதிர்ச்சி தகவல்  வெளியாகியுள்ளது. சில ஊடக நிறுவனங்கள் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வில்லை என்று பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருசில ஊடக நிறுவனங்  கள் மட்டுமே கொரோனா தடுப்பு பாதுகாப்புக் காக செய்தியாளர்களை வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதித்துள்ளது.

ஒருசில நிறுவனங்கள் தினமும் பணிக்கு வரவேண்டும் என்றும் நிர்பந்தித்து வருகிறது. பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தாக நிறுவனங்கள் பயமுறுத்தி வரும் சூழ்நிலை யில் பணிபுரியும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஒரு சில நிறுவனங்கள் கொரோனாவை பயன்ப டுத்தி பத்திகையாளர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ததாக மனகுமுறல் வெளியாகி வருகிறது. கொரோனா பாதிப்பு நேரத்தில் செய்தி நிறுவனங்களுக்கு விளம்பரம் குறைவதால் வருவாய் இழப்பு சந்தித்து வருகிறது. இதை  காரணம் காட்டி பத்திரிகையாளர் ஊதியத்தை  குறைப்பதாக தகவல் வெளிவருகிறது. அச்சு  மற்றும் காட்சி ஊடங்கங்கள் வருவாய் இழப்பை சந்தித்துவருவதை பத்திரிகையாளர்கள் சங்கங்கள் உணர்கின்றன.

அதேவேலையில் நிறுவனங்கள் பத்தி ரிகையாளர்களை பாதிக்காத வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்தி கையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கி றது. இந்த சூழலில் தமிழக அரசு தினசரி பத்திரி கையாளர் சந்திப்பை தவிர்த்து காணொளி மற்றும் டிஜிட்டல் சந்திப்பு மூலமாகவும் தினசரி  செய்திகளை அறிக்கைகள் மூலம் செய்தி நிறுவனங்களுக்கு தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். பணியின்போது உயிரிழக்கும் பத்திரிக்கையாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என டி.யூ.ஜே. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பாக, திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பப்பட்ட அரியலூர் மாவட்ட மூன் டிவி செய்தி யாளர் வெற்றிவேல் உயிரிழந்துள்ளார். இவருடைய குடும்பத்தாருக்கு ரூ.5 இலட்சம் அரசு நிவாரண உதவி வழங்கவேண்டும்.

கொரோனா தொற்று சூழலில் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறி வித்துள்ளார். இந்த தொகை ஒரு பத்திரிக்கை யாளரின் உயிரிழப்புக்கு ஈடானது அல்ல. மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழு மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்றி னால் உயிரிழப்பு ஏற்பட்டால் அரசு வழங்கும்  நிவாரண தொகையைப்போன்றே, பத்திரிகை யாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும். மேலும், சென்னை  உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு  பி.எஸ்.டி. புருஷோத்தமன் தெரி வித்துள்ளார்.

எம்யூஜெ

சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தின் (எம்யூஜெ) தலைவர் ஸ்ரீதர்,  செயலாளர் சங்கர் ஆகியோர் வெளியிட்டிருக் கும் அறிக்கையில், சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவ ருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது.  இந்தத் தகவல்  வேதனை அளிக்கிறது என்றும்  பத்திரிகையா ளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்களுக்கு, பணியாற்றும் நிறுவனங்கள் உடனடியாக ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். உடல் நலக்குறை வாலும் பொதுப் போக்குவரத்து இல்லாததாலும்  பணிக்கு வர இயலாத பத்திரிகையாளர்க ளுக்கு எந்தப் பிடித்தமும் செய்யாமல் ஊதியம்  வழங்கப்பட வேண்டும். இதனைப் பின்பற்றாத  நிறுவனங்கள் மீது தமிழக அரசின் தொழி லாளர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளனர்.