tamilnadu

img

மதுக்கடையை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகுமாம்: அமைச்சர்

சென்னை, அக். 22- பூரண மதுவிலக்கு என்ற கொள்கையில் ஆளும்  அதிமுக அரசு உறுதியாக இருப்பதாகவும், மதுக்  கடைகளை ஒரே நாளில் மூடினால், கள்ளச்சாரா யம் மீண்டும் உருவாகும் என்பதால், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி திட்ட தொடக்க விழா  சென்னை அண்ணா மேலாண்மை மையத்தில்  நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

7 பேர் விடுதலை விவகாரம் குறித்து ஆளுநர்  மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும்  வராத நிலையில், அதுகுறித்த விவாதங்கள் தேவை யில்லை என்றார். மத்திய அரசின் மும்மொழி வரைவு தொடர்பான  தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில், தமிழ் மற்றும்  ஆங்கிலம் மட்டும் தான் என்றும், இந்தியை திணிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். கூட்டாட்சி  தத்துவத்தில் மொழி திணிப்பு இருக்கக் கூடாது  என, பிரதமரிடம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருப்ப தாகவும், அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.