சென்னை,ஜூலை 22- சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொறியியல் 2வது கட்ட கலந்தாய்வு 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து ஒதுக்கீட்டு கடிதம் பெற்று வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் 3-வது சுற்றில் 33,167 மாணவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. உத்தேச ஒதுக்கீடு 26,318 இடங்களாகும். இறுதி ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை (ஜூலை23) வழங்கப்படுகிறது. உத்தேச 2-வது சுற்று ஒதுக்கீடு மற்றும் ஏற்கனவே முடிந்துள்ள 4 சுற்று கள் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 47,850 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 4-வது சுற்று சேர்க்கை 24 ஆம் தேதி தொடங்கி 27-ந்தேதி முடிகிறது. இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு உடனடி சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் சேர முடியாமல் இருந்த மாணவர்களுக் காக துணை கலந்தாய்வு நடத்தப்படு கிறது. பொது கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இணைய தள வழியாக விண்ண ப்பத்தை பதிவு செய்ய வேண்டும். கடந்த 20 ஆம் தேதி முதல் பதிவு தொடங்கி உள்ளது. 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2-வது கட்ட கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இது நேர்முக கலந்தாய்வாக சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.