tamilnadu

img

வர்த்தகப் பற்றாக்குறையை விவாதிக்க உயர்மட்டக்குழு

மோடி- ஜீ ஜின் பிங் பேச்சுவார்த்தையில் ஒப்புதல்

சென்னை, அக்.12- இந்தியா- சீனா இடையேயான வர்த்தக பற்றாக்குறையை விவா திக்க உயர்மட்டக்குழு அமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. சென்னையை அடுத்த கோவளத் தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட் டலில் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சனிக்கிழமை (அக்.12) சந்தித்துப் பேசினர்.  காலை 10 மணி முதல் 11.45 மணி வரை இருதரப்புக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கர வாத ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருநாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்திய வெளியுறவுத்துறை செய லர் விஜய் கோகலே செய்தியா ளர்களிடம் பேசுகையில், இந்தியா - சீனா உறவு என்பது அரசுகளுக்கு இடையிலான உறவாக இல்லாமல் இருநாட்டு மக்களையும் இணைப் பது குறித்து பேசினர் என்றார். சில பிரச்சனைகளில் இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் தெளி வாக இருக்கின்றன. பாதுகாப்புத் துறையில் இந்தியா - சீனா ஒத்து ழைப்பை அதிகரிப்பது பற்றியும் ஜனாதிபதி ஜின்பிங் - பிரதமர் மோடி பேசினர். 

பயங்கரவாத, அடிப்படைவாத சவால்களை எதிர்கொள்வது முக்கி யம் என்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர். பாதுகாப்பு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இருக்கும் என்றும் அவர் கூறினார். இம்ரான் கானின் சீனப் பயணம் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசினாலும் அதுகுறித்து விரிவாக ஆலொசிக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை உள்நாட்டு விவ காரம் என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. எனவே, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவில்லை. எல்லை பிரச்சனை தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் அளவில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்தியா- சீனா இடையே யான வர்த்தக பற்றாக்குறையை விவாதிக்க உயர்மட்டக்குழு அமைக் கப்படும். உற்பத்தித்துறையில் கூட்டு றவை மேம்படுத்த உயர்மட்டக்குழு ஆலோசிப்பார்கள். அந்த குழுவில் சீன துணை அதிபர், இந்திய நிதி யமைச்சர் இடம் பெறுவார்கள். பிராந்திய வர்த்தக ஒப்பந்தம் பற்றி பொதுமக்கள் கருத்துகளை அறிய இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பு தல் அளித்துள்ளனர். வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சாதகம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடு களை வரவேற்றுள்ளோம். இரு நாடு களின் சந்தையை விரிவுபடுத்துவது குறித்து தலைவர்கள் பேசியதாக அவர் தெரிவித்தார்.  மேலும், இரு நாடுகள் இடையே யான ராஜீய தொடர்புகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு தலைவர் களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்திய, சீனா தரப்பு சிறப்புப் பிரதி நிதிகள் மீண்டும் சந்தித்துப் பேச உள்ளனர். சென்னையில் சீனாவின் துணை தூதரகம் அமைப்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்ததால் இது குறித்து விவாதிக்கவில்லை.

சீனாவில் உள்ள தமிழ் ஆல யங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - சீனா உறவில் இருநாட்டு மக்களை யும் இணைப்பது பற்றியும் பேசிய தலைவர்கள், இந்தியா, சீனா ஆகிய இருநாட்டு தலைவர்களிடையே முறைசாரா பேச்சுவார்த்தைகள் தொடர சீன ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர ஜி ஜின்பிங் முன் வைத்த அழைப்பை பிரதமர் மோடி யும் ஏற்றுக்கொண்டதாக கூறினார். பண்டைய காலத்தில் தமிழ கம் - சீனாவின் பியூஸியான் மாகா ணத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றியும், தற்போது நேரடித் தொடர்பை ஏற்படுத்துவது பற்றியும் இரு தலைவர்களும் பேசினர். கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர் களுக்கு அதிக வசதிகள் செய்து கொடுப்பது குறித்து இது தலை வர்களும் கலந்துரையாடினர்.

சீனாவில் உள்ள தமிழ் ஆல யங்கள் பற்றி ஆய்வு செய்யவும், தடையில்லா உள்நாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்தி டுவது பற்றி நாட்டு மக்களிடையே கருத்துக் கேட்பு நடத்துவது பற்றி யும் ஆலோசிக்கப்பட்டது. சீன ஜனா திபதியுடனான அலுவல்சாரா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில்தான் நடை பெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார். மாமல்ல புரத்தைத் தேர்வு செய்ததும் பிரத மர் மோடிதான் என்றும் விஜய் கோகுலே தெரிவித்தார். மாமல்லபுரத்தை தவிர வேறு ஒரு இடத்தில்தான் இந்த சந்திப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்பியதாகக் கூறப்படும் தகவல் உண்மையில்லை.உலகமே வியந்து பார்க்கும் மாமல்லபுரத்தில்தான் இந்த சந்திப்பு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசும் விரும்பியது. சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் தமிழில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

பட்டுச்சேலை அன்பளிப்பு 

இந்தியா- சீனா பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் தமிழகத்தின் கைத்தறி, கைவினைப்பொருட்கள் தயாரிப்பு குறித்த கண்காட்சியை இரு தலைவர்களும் பார்வையிட்டனர். காஞ்சிப்பட்டுத் தறி, கைவினைப் பொருட்களை செய்யும் முறைகளை பிரதமர் மோடி சீன அதிபருக்கு நேரடி யாகக் விளக்கினார். பித்தளையால் அழகுற தயாரிக்கப்பட்ட விளக்கு கள் உள்ளிட்டவற்றையும் இதர கைவினைப்பொருட்களையும் இரு வரும் பார்வையிட்டனர். பின்னர் ஜின்பிங்குக்கு பட்டுச்சேலை ஒன்றை பிரதமர் மோடி அன்பளிப்பாக அளித்தார்.

கோலாகல வரவேற்புடன் தொடங்கி, கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை, தனிப்பட்ட பேச்சு வார்த்தை என இரு தலைவர்களின் சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது.கூட்டத்துக்குப் பிறகு, இரு தலை வர்களும் பரஸ்பரம் நினைவுப் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். மதிய விருந்து முடிந்து கோவளம் ஹோட்டலில் இருந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் காரில் புறப்பட்டார். பிரதமர் மோடி வாயில்வரை கையசைத்து வழி யனுப்பி வைத்தார். வரும் போது எவ் வாறு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டதோ, அதேப்போன்று கலை நிகழ்ச்சி களுடன் ஜி ஜின்பிங்குக்கு கோலாகல வழியனுப்பும் இடம்பெற்றிருந்தது.

நேபாளம் பயணம்

காரில் சென்னை விமான நிலையம் திரும்பிய ஜின்பிங் அங்கிருந்து தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசு உயர் அதிகாரிகள், சீன தூதரக அதிகாரிகள் சீன ஜனாதிபதியை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.  அதே சமயம், கோவளம் ஹோட்டல் அருகே திருவிடந்தையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தி ற்கு வந்து பின்னர் தனி விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றார்.