பெங்களூரு:
பாஜக-வைச் சேர்ந்தவர்கள் தன்னை காபி குடிப்பதற்காக அழைத்துச் சென்று கட்சியில் சேர்த்து விட்டதாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர் புகார் தெரிவித்துள்ளார்.பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் வசந்தகுமார், கடந்த டிசம்பர் 3 அன்று, காங்கிரசிலிருந்து விலகி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜகவில் இணைந்தார். ஆனால், இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், தற்போது, மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே அவர் திரும்பியுள்ளார்.இதனையொட்டி செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ள வசந்தகுமார், ‘‘காபி குடிக்க வருமாறுதான், பாஜக நண்பர்கள் தன்னை அழைத்துச் சென்றார்கள்; ஆனால், திடீரென கட்டாயப்படுத்தி பாஜக-வில் சேர்த்து விட்டார்கள்” என்று பேட்டி அளித்துள்ளார்.மேலும், “கட்டாயப்படுத்தியதாலேயே பாஜக-வில் இணைந்தேன் என்றும், ஆனால், நான்என்றைக்கும் காங்கிரஸ்காரன் தான்” என்றும் கூறியுள்ளார்.இந்த பேட்டியின்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவும் வசந்தகுமாருடன் இருந்துள்ளார். அவர், “பாஜக எந்த அளவுக்கு கீழ் தரமானஅரசியல் செய்யும் என்பதற்கு இந்தசம்பவமே உதாரணம்” என்று விமர்சித்துள்ளார்.