tamilnadu

img

3 நாட்களுக்கு ஒரு கொலை; 2 நாட்களுக்கு ஒரு வல்லுறவு... தலித்துக்கள் மீதான வன்கொடுமை கர்நாடகா முதலிடம்

பெங்களூரு:
கர்நாடகாவில், தலித் மக்களுக்கு எதிரானகுற்ற விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், நாட்டிலேயே கர்நாடகாவில்தான் மூன்று நாட்களுக்கு ஒரு கொலை அல்லது கொலை முயற்சி தாக்குதல் தலித்துகளுக்கு எதிராக நடப்பதாகவும் அரசே இணைந்து நடத்தியஆய்வில் தெரியவந்துள்ளது.கர்நாடக அரசின் சமூக நலத்துறை, கர்நாடகஎஸ்.சி. மற்றும் எஸ்.டி. கண்காணிப்பு மற்றும்பலப்படுத்துவதற்கான குழு மற்றும் கர்நாடகதலிதா மஹிலா வேதிகா ஆகியவை இணைந்துஇதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டன. அதன் முடிவுகள் தற்போது பெங்களூருவில் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், “கர்நாடக மாநிலத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பட்டியல் (எஸ்.சி.) அல்லது பழங்குடியினர் (எஸ்.டி.) மக்களுக்கு எதிராக கொலை அல்லது கொலை முயற்சி சம்பவம் அரங்கேறுகிறது. ஒரு எஸ்.சி.அல்லது எஸ்.டி. பெண் சராசரியாக இரண்டுநாட்களுக்கு ஒருமுறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்” என்று கூறப்பட் டுள்ளது.அறிக்கையை வெளியிட்டு, கர்நாடக தலிதாமஹிலா வேதிகா மாநில கன்வீனர் பி. யசோதா,மேலும் கூறியதாவது:“2017-ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப் பதிவுக் கழக அறிக்கையின்படி, எஸ்.சி. மற்றும்எஸ்.டி.களுக்கு எதிரான குற்றங்களின் விகிதத்தில் கர்நாடகா தொடர்ந்து முதலிடம் வகிப்பதுவெட்கக்கேடானது. 2018-இல் நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 140என்பதைக் காணும்போது நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். ஒரு நாளைக்கு சுமார் நான்கு அல்லது ஐந்து வன்முறைகள் அல்லது ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு குற்றம்நடைபெறுவதையே இது காட்டுகிறது.எஸ்.சி., எஸ்.டி. மக்கள் மீது, 2018-ஆம் ஆண்டில் 164 பாலியல் வல்லுறவு குற்றங்கள் மற்றும் 122 கொலை முயற்சி அல்லது கொலைக்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் தண்டனைகளைக் கணக்கிடும்போது குறைவாகவே உள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான குற்றவழக்குகளில் 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட1,087 தீர்ப்புகளில் 46-இல் மட்டுமே தண்டனைகள் வழங்கப்பட்டன என்பது மிகவும் மோசமான தண்டனை விகிதமாகும். எஸ்சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 874 வழக்குகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 167 வழக்குகள் வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் தண்டனை விகிதம் வெறும் 4.23 சதவிகிதம் மட்டுமே ஆகும். அதேநேரம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டதன் விகிதம் 80.4 சதவிகிதமாக உள்ளது.10 மாவட்டங்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகள் சேர்த்துதீர்க்கப்படாமல் உள்ள ஒட்டுமொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1205 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானவன்கொடுமையில், மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு 7-ஆவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2018-ஆம் ஆண்டிலும் அதுதொடர்கிறது.பெங்களூரு ஒரு பெருநகரமாக இருந்தாலும், தீண்டாமை இங்கு இன்னும் அதிகமாக உள்ளது.

பெங்களூருவில் எந்த வீட்டு உரிமையாளரும் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வீடுகளைவாடகைக்கு விட விரும்பவில்லை.பெரும்பாலான துப்புரவுத் தொழிலாளர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கணினி யுகத்தில் கூட, அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டால், தனிக்குவளையில் கொண்டுவந்து கொடுப்பது உள்ளது.இவ்வாறு பி. யசோதா கூறியுள்ளார்.மேலும் இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், “கர்நாடகாவின் 30 மாவட்டங்களிலும் தலித்துகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்களை நிறுவ வேண்டும்” என்பது உள்பட19 பரிந்துரைகளை, மாநில தீண்டாமை ஒழிப்புவிழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் மாநில முதல்வருமான பி.எஸ். எடியூரப்பா விடம் ஆய்வுக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.