லக்னோ:
பசு பாதுகாப்பு குண்டர்கள்உள்ளிட்ட கும்பல் வன்முறையாளர்களிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கு, முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடிகள் துப்பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச ஷியா முஸ்லிம் பிரிவு தலைவரான கால்பே ஜாவத் கூறியுள்ளார்.கும்பல் வன்முறையாளர்களால் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் 18-ஆம் தேதியன்றுதப்ரிஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்டார். பீகாரில் ஜூலை 2-ஆம் தேதிதிருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, இளைஞர் ஒருவர் கும்பல் வன்முறையாளர் களால் கொல்லப்பட்டார். அதே பீகார் மாநிலத்தில் ஜூலை 19-ஆம் தேதியும், கன்றுகுட்டிகளை திருடியதாக கூறி 3 பேரை ஒரு கும்பல் அடித்தே கொலைசெய்தது.
இச்சம்பவங்களால் தலித்துகள், முஸ்லிம்கள் இடையே ஒரு வித அச்சநிலை உருவாகி உள்ளது. கும்பல் வன்முறையாளர்களை ஒடுக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலித்துகள், பழங்குடிகள் மற்றும் முஸ்லிம்கள், சட்டத்துக்கு உட்பட்டு துப்பாக்கி உரிமங்களை எப்படி பெறுவது என்பதற்காக பயிற்சிமுகாம்கள் நடத்தப்படும் என உத்தரப்பிரதேசத்தின் ஷியா முஸ்லிம் பிரிவு மதகுருகால்பே ஜாவத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் 6 நகரங்கள்உட்பட மொத்தம் 12 இடங்களில் துப் பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான பயிற்சி முகாம் கள் நடத்தப்படும் என்று ஜாவத்தின் வழக்கறிஞரான மெக்மூத் பிரச்சா கூறியுள்ளார்.இதனிடையே தாங்கள் ஆயுதப் பயிற்சி வழங்கப்போவதாக சிலர் செய்திகளைத் திரித்து வெளியிடுகிறார்கள், அது தவறானது என்று கூறியுள்ள ஜாவேத், கும்பல் வன்முறைகளை தடுக்க அரசு உரிய சட்டம் இயற்றிநடவடிக்கை எடுத்தால் அதுவே எங்களுக்குப் போதும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.