பெங்களூரு:
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர், சி.எஸ். நிரஞ்சன் குமார். இவரது மகன் புவன் குமார். இவர், ஊரடங்கை மீறி மைசூரு - ஊட்டி நெடுஞ்சாலையில் குதிரையில் ஊர் சுற்றிய வீடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் கொரோனாவைரஸ் தொற்று எண்ணிக்கை 900-ஐகடந்து விட்டது. உயிர்ப்பலியும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா மக்களுக்கு தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-வின் மகனே ஊரடங்கை பொருட்படுத்தாமல், முகக் கவசமும் அணியாமல், ஒரு இளவரசரைப்போல ஊர்சுற்றித் திரிவாரா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடு மக்களுக்குத்தான், எம்எல்ஏ மகன்களுக்கெல்லாம் இல்லையா? என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.புவன் குமார் குதிரையில் சுற்றியது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக சாம்ராஜ் நகர் எஸ்.பி. கூறியுள்ளார். எனினும் இதுவரை அவர் மீதுவழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.இதனிடையே தனது மகன் ஊர் சுற்றியது பற்றி பேட்டி அளித்துள்ள பாஜக எம்எல்ஏ நிரஞ்சன் குமார், “ஊரடங்கின் போது குதிரையில் செல்லக் கூடாது என விதி எதுவும் இல்லை?” என்று திமிராக பேட்டி அளித்துள்ளார்.