tamilnadu

img

முஸ்லிம் பகுதிகளுக்கு எம்எல்ஏ நிதியை தர மாட்டேன்... பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யாவின் வன்மம்

பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் தாவங்கரே மாவட்டம் கொனல்லி தொகுதி பாஜக எம்எல்ஏ-வாகவும், முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகராகவும் இருப்பவர் ரேணுகாச்சார்யா.இவர், கடந்த திங்களன்று தாவங்கரேயில் நடைபெற்ற ‘சிஏஏ’ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில், முஸ்லிம்களை அவதூறாகப் பேசி, வெறுப்பை அள்ளி வீசியுள்ளார்.

“ஒரு சில துரோகிகள் மசூதிகளில்அமர்ந்து பத்வாக்களை வழங்குகிறார்கள். அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்வதில்லை. ஆயுதங்களைசேகரிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மசூதி எதற்கு?” என்று பேசியுள்ளார்.மேலும், “ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு நான் நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டேன்; அதற்கு பதிலாக இந்து மக்களுக்கு அந்த நிதியைத் திருப்பி விடுவேன்; அரசியல் என்றால் என்ன? என்பதை முஸ்லிம்களுக்கு காட்டுவேன்” என்றும் வன்மத்தைக் கொட்டியுள்ளார்.இதற்கு முன்பு, சோமசேகர ரெட்டிஎன்ற பாஜக எம்எல்-வும் இதேபோல பேசியிருந்தார்.“இந்தியாவில், முஸ்லிம்கள் மொத்தமே 17 சதவிகிதம்தான்; ஆனால், நாங்கள் 80 சதவிகிதம் நாங்கள் உங்களுக்கு எதிராக திரும்பினால் உங்கள்நிலைமை என்ன என்பதை நினைத்துப்பாருங்கள்?” என்று பகிரங்கமாக மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.