தென் கொரியாவின் முக்கிய நக ரான இன்ஷியானில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைத்து வீரர் - வீராங் கனைகளும் வெளியேறிவிட்ட நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பருப்பள்ளி காஷ்யப் தாய்நாட்டிற்காகத் தனி ஒருவராகப் போராடி வருகிறார். காஷ்யப் தனது காலிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கின் ஜான் ஜார்ஜென்சனை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப் பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவிக்க முதல் செட்டே சிக்கலான முறையில் நிறைவு பெற்றது.
முதல் செட்டை காஷ்யப் 24-22 என்ற கணக்கில் கடும் போராட்டத்துடன் கைப்பற்றி னார். 2-வது செட்டில் சற்று சுதாரித்துக் கொண்ட காஷ்யப் அதிரடி பாணியைக் கையிலெடுத்து அந்த செட்டை 21-8 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் 24-22, 21-8 என்ற கணக்கில் ஜார்ஜென்சனை வீழ்த்திய காஷ்யப் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் நம்பர் 1 வீரர் ஜப்பானின் கென்டோ மொமோடாவை எதிர்கொள்கிறார். இடது கை வீரரான மொமோடா வலுவான பார்மில் உள்ளார். கடந்த வாரம் சீன ஓபனை கைப்பற்றிய தெம்புடன் களமிறங்கு வதால், காஷ்யப்பின் இறுதிப்போட்டி கன விற்குச் சற்று குடைச்சல் ஏற்படும். இருப்பி னும் அரையிறுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.