tamilnadu

img

லண்டன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பாப் வில்லிஸ் காலமானார்

1970-80க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தனது முரட்டுத்தனமான பந்துவீச்சின் மூலம் கிரிக்கெட் உலகை மிரட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான பாப் வில்லிஸ் (70) காலமானார்.  இங்கிலாந்து நாடு 1965-ஆம் ஆண்டில் வேகப்பந்துவீச்சு பற்றிய புதிய வியூகத்தை செயல்படுத்த முடியாமல் திணறியது. 1981 ஆஷஸ் வெற்றிக்கு முக்கியக்காரணமாக இருந்த பாப் வில்லிஸ், அதன் அடிப்படையில்  1982-ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை பெற்றார். இதையடுத்து அதிரடி பந்துவீச்சு, கேப்டன் என இரண்டிலும் பாப் வில்லிஸ் அசத்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு புதிய பாதையில் பயணித்தது.   90 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 325 விக்கெட்டுகளை கைப்பற்றிய “ஆஷஸ் ஹீரோ” பாப் வில்லிஸ் கடந்த சில வருடங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் புதனன்று  மறைந்தார். பாப் வில்லிஸின் மறைவுக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.