மெல்போர்ன்
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்று இன்றுடன் நிறைவு பெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டோமினிக் தியமை எதிர்கொண்டார். நடால் உலக சாம்பியன் வீரர் என்பதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் தனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்திய தியம் முதலிரண்டு செட்களை 7-6 (7-3), 7-6(7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார்.
மூன்றாவது செட்டை நடால் 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 4-வது செட்டை தியம் 7-6(8-6) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வீஸ் மற்றும் அதிரடி ஷாட்களில் ஆக்ரோசமாக அசத்திய தியமை அனைத்து தரப்பு ரசிகர்களும் மைதானம் குலுங்கப் பாராட்டினார்.