tamilnadu

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பெடரர் அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன் 
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

வியாழனன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், முன்னணி வீரரும் 3-ஆம் நிலை நட்சத்திரமான சுவிஸின் ரோஜர் பெடரரும் மோதினர். 
இருவரும் அதிரடிக்கு பெயர் பெற்றவர்கள் என்பதால் இந்த ஆட்டத்தை  டென்னிஸ் உலகம் ஆவலுடன் உற்றுநோக்கியது. தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய ஜோகோவிச் முதல் செட்டை கடும் போராட்டத்துடன் 7-6(7-1) என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டை பெடரர் கைப்பற்றி பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்க 2-வது செட்டிலும் ஜோகோவிச்சின் கையே ஓங்கியது.  தொடர்ந்து அதிரடியைக் காட்டிய ஜோகோவிச் கடைசி 2 செட்களை 6-4, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி இறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச்சை கணிக்க முடியாமல் பெடரர் திணறியதே தோல்விக்குக் காரணம் குறிப்பாக இந்த ஆட்டத்தில் டிராப் எனப்படும் நெட் ஷாட்கள் அதிகமாக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.