அரியலூர், ஜூலை 29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டத்திற்குட்பட்ட கோடாலி கருப்பூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு தற்போது விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் விவசாயம் செய்து நெல்லை கொண்டு வந்து வாரக் கணக்கில் காத்திருந்த னர். தற்போது பெய்து வரும் மழையினால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் அனை த்தும் மழையில் நனைந்து முளைத்து விட்ட தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுவ தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடாலி கருப்பூர், சோழமாதேவி அணை, இடங்கன்னி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், சிபிஎம் தா. பழூர் ஒன்றிய செயலாளர் ஜே.ராதாகி ருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவி த்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட அனை த்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழ ங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரி க்கை விடுத்துள்ளனர்.