சென்னை, ஆக.26- ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண் டும், மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார் கள். இதன் ஒரு பகுதியாக 6 மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட் டத்தில் இருந்து வருகிறார்கள். இதில் 2 மருத்து வர்கள் உடல்நலம் பாதித்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். ஆக.22 அன்று மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாளப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இதுவரை அரசு மருத்து வர்களை அழைத்துப் பேசாததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டி வருவ தும் கண்டனத்திற்குரியது. போராடும் மருத் துவர்கள் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.