திருவண்ணாமலை, டிச.30- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு அமைச்சரின் சொந்த ஊரில் ஒரு மூட்டை அரிசி விநியோகம் செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. காவல்துறையினரை பார்த்த தும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட, அரிசி மூட்டையை வாங்கியவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்களன்று (டிச.30) நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 580 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். மாவட்டத்தில், கடந்த 27 ஆம் தேதியன்று, 9 ஒன்றியங்களுக்கான முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. 2 ஆம் கட்டமாக போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, செங்கம், புதுப்பாளை யம், ஜவ்வாதுமலை, வந்தவாசி, ஆரணி, மேற்கு அரணி ஆகிய 9 ஒன்றி யங்களில் திங்களன்று(டிச.30) வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சித் தேர்தலில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுப வர்கள் தங்களுக்கு வாக்களித்த ஆதர வாளர்களுக்கு, ரகசிய டோக்கன் வழங்கியுள்ளனர். அந்த டோக்கனை கொண்டு செல்பவர்களுக்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரகுநாத புரம் அரிசி ஆலையில் 25 கிலோ அரிசி மூட்டை வழங்கியுள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் பத விக்குப் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்த தீபா சம்பத், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கௌரிராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தர்மன் ஆகியோர் சார்பில் இந்த அரிசி விநியோகம் நடைபெறுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரிசி விநியோ கம் செய்யப்படுவதாகக் கூறப்பட்ட கே.ஆர். அரிசி ஆலைக்கு காவல் துறையினருடன் அதிகாரிகள் விரைந் தனர். அவர்கள் வருவதை அறிந்து அரிசி ஆலை உரிமையாளரும் ஊழியர்களும் தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில், அரிசி மூட்டை களை வாங்கிய மக்கள், அவசர அவசர மாக வெளியேறினர். சிலர் ஆலையின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பியோ டினர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சேவூர் கிராமம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச் சந்திரன் சொந்த ஊராகும். அவரது உற வினர்களும், அதிமுகவினரும்தான் டோக்கனும் அரிசி மூட்டையும் விநியோ கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.