tamilnadu

கொரோனா பரவலும் அலைமோதிய கூட்டமும் ஜெயங்கொண்டத்தில் பிரபல ஜவுளி கடைக்கு சீல்

அரியலூர், ஆக.5- அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,100-ஐ கடந்தும் உயிரிழப்பு 8 எனவும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அரியலூர் நகர்ப்புற பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பத்திரப் பதிவுத்துறை, தாலுகா அலுவலகம், காவல்நிலையம் என அரசு துறைசார்ந்த பகுதிகளிலும் பணிபுரிவோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா, ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் அமைக்கப்ட்ட கொரோனா முகாமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஜவுளிக்கடை ஒன்றில் அதிக கூட்டம் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்ப டையில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியருக்கு கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார்.  இதையடுத்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, ஜெயங்கொண்டம் வட்டாட்சி யர் கலைவாணன், நகராட்சி ஆணையர் அறச்செல்வி ஆகி யோர் கடைவீதியில் உள்ள ஜவுளி கடைக்கு சீல் வைத்தனர்.