கொரானா ஊரடங்கால் வேலைவாய்ப்பு இன்றி வருமானம் இழந்து பட்டினியால் வாடும் ஏழை-எளிய மக்களுக்கு அரசு ரேசன் கார்டு ஒன்றுக்கு தலா ரூ. 7 ஆயிரம் வழங்க கோரியும், தனியார் வங்கிகளின் கட்டாய வசூலுக்கு தடை விதிக்கக் வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் கே.முருகன் தலைமையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.