அமராவதி:
ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக ஹைதராபாத் இருந்து வந்த நிலையில் கடந்த 2014-இல் ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது, 2 மாநிலங்களுக்கும் ஹைதராபாத் நகரமே தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பொதுத்தலைநகராக இருக்கும்; இதற்குள் ளாக ஆந்திரா தனது புதிய தலைநகரை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது.இதன்படி ஆந்திராவின் தலைநகர் ‘அமராவதி’ என்ற பெயரில் அமையும் என்று 2014-இல்அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.அமராவதியை கட்டமைப்பதற்கு சுமார் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு செலவாகும் எனகணிக்கப்பட்ட நிலையில், உலக வங்கி உட்பட பல நிறுவனங்களிடம் கடன் கேட்கும்முயற்சியில் ஆந்திர அரசு இறங்கியது.மத்திய அரசு மூலமாக 300 மில்லியன் அமெரிக்க டாலர்- அதாவது இந்திய மதிப்பில்ரூ. 2 ஆயிரம் கோடியை உலக வங்கியிடம் இருந்துபெறும் முயற்சிகளும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில்தான், ஆந்திராவுக்கு கடனுதவி வழங்குவதை நிறுத்திக் கொள்வதாக உலக வங்கியின் செய்தி தொடர்பாளர் சுதிப் மசூம்தார் என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடனுதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை மத்திய பாஜக அரசு திரும்பப்பெற்றுக் கொண்டதாகவும், இதன் காரணமாகவே கடனுதவி வழங்குவதிலிருந்து உலக வங்கி பின்வாங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு, கேரள மாநிலங்களைப் போலவே,ஆந்திராவிலும் பாஜகவுக்கு மக்கள் பலத்த அடி கொடுத்தனர். ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றிபெறவில்லை. இந்நிலையில், அமராவதி கட்டுமானத்திற்கான கடனுதவியை மோடி அரசு தடுத்து நிறுத்தியிருப்பது, ஆந்திரா மாநில மக்களை பழிவாங்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.