புதுதில்லி:
2018 முதல் 2020 வரையிலான3 ஆண்டுகளில் மட்டும்நரேந்திர மோடி தலைமையிலானமத்திய பாஜக அரசு ரூ. 19 லட்சம்கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கியுள்ளது.திமுக எம்.பி. திருச்சி சிவா,மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுதொடர்பான தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1 லட்சத்து 44ஆயிரம் கோடி, இரண்டாம் காலாண்டில் ரூ. 1 லட்சத்து 44ஆயிரம் கோடி, மூன்றாம் காலாண்டில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கோடி, நான்காம் காலாண்டில் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ. 5 லட் சத்து 71 ஆயிரம் கோடியை மோடி அரசு கடனாக வாங்கியுள்ளது.அதற்கு அடுத்ததாக 2019-20 நிதியாண்டிலும், முதல் காலாண்டில் ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி, இரண்டாம் காலாண்டில் ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி,
மூன்றாம் காலாண்டில் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரம் கோடி, நான்காம்காலாண்டில் ரூ. 76 ஆயிரம் கோடிஎன மொத்தம் ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி, மோடி அரசு கடன் பெற்றுள்ளது.இவை தவிர, 2020-21 நிதியாண்டில் சந்தைக் கடன் வாயிலாக ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் கோடியும், குறுகிய காலக் கடன் களில் ரூ. 2 லட்சம் கோடியும் மத்திய அரசு வாங்கியுள்ளது.எதிர்வரும் 2021-22 நிதியாண்டிலும் ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம் கோடி மட்டுமே கடன் வாங்க மோடி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.