அமெரிக்காவில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று லாங்பீச் கலிபோர்னியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை ரிச்சர்டு கிராண்ட் என்பவர் சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு தந்தை தனது இளம் மகளை தோளிலேற்றி வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது தந்தையுடன் மகளையும் ரப்பர் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கிகளுடன் காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் படத்தை பதிவு செய்த ரிச்சர்டு கிராண்ட், நான் பதிவேற்றிய ஒற்றை புகைப்படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை. ஆனால் அந்த காட்சி என்னை உலுக்கியதாலேயே அந்த புகைப்படத்தை பதிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் அந்த தந்தைக்கும் குழந்தைக்கும் நேரே துப்பாக்கியை நீட்ட வில்லை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். நானும் அதைநம்புகிறோன். ஆனால் எனது பார்வையில் பட்டதையே புகைப்படமாக பதிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.