அகமதாபாத்:
வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பப் பணம் செலுத்தத் தேவை இல்லை என மத்திய பாஜக அரசு கூறியிருக்கும் நிலையில், அதற்கு மாறாக, பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்திலேயே தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலத் தொழிலாளர் களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதியுடன் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதையொட்டி இந்திய ரயில்வேயும் இடைநில்லா ரயில் சேவைகளை அறிவித் தது. ஆனால், இவ்வாறு செல்லும் தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணத்தை யார் செலுத்துவது? கையில் பணமில்லாத தொழிலாளர்களிடமே கட்டணத்தை வசூலிக்க திட் டமா? என்று கேள்விகள் எழுதன. இந்த செலவையும் மாநில அரசுகள்மீது சுமத்துவதற்கு, மத்திய அரசுமுயற்சிக்கக் கூடாது என்று கோரிக் கைகள் எழுந்தன.
இந்த பின்னணியில், ரயில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவிகிதத்தை ரயில்வே அளிக்கும் எனவும் 15 சதவிகிதத்தை மாநில அரசுகள் ஏற்கும்என்றும் மத்திய பாஜக தெரிவித்தது.ஆனால் பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் டிக்கெட் கட்டணத்தை வாங்கிக் கொண்டே வெளிமாநிலத் தொழிலாளர்கள் ரயிலில்அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேசம், ஒடிசா, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குச் சிறப்பு இடைநில்லா ரயில்கள் விடப்பட்டன. இந்த ரயில்கள் அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா நகரங்களில் இருந்து கிளம்பி உள்ளன. இதில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் பாரபன்கி கிராமத்தைச் சேர்ந்த மோகன்லால் என்பவர் தமது கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு, கடந்த ஆறு வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனினும் தாங்கள் ஊர் திரும்ப ஒவ்வொருவரும் ரூ. 480 அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரயிலில் தங்களுக்குக் குடிநீர் வழங்காததால் பலமணி நேரம் தவித்ததாகவும், அத்துடன் டிக்கெட்டுக்கு பணம் இல்லாததால், தாம் ஒரு பால்காரரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியதாகவும் கூறி உள்ளார்.ஒடிசாவைச் சேர்ந்த தேபாசிங், தாமும் தமது நண்பர்களும் ரயிலில் சென்றதற்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறியுள்ளார். தாங்கள் மட்டுமன்றி, ரயிலில் சென்றஅனைவருமே கட்டணம் செலுத்தித் தான் சென்றார்கள் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
இவை ஒருபுறமிருக்க, பீகாரைசேர்ந்த விஜய்குமார் என்பவர், “நான்நிதிஷ்குமாருக்கு வாக்களிக்கப் பீகாருக்கு சென்றேன். அப்போது ரயிலில்எனக்கு ராஜமரியாதை அளிக்கப்பட் டது. இலவச டிக்கெட், உணவு எனஅனைத்தும் வழங்கப்பட்டது. ஆனால் நான் இப்போது தினமும் ஆட்சியர் அலுவலகம் சென்று விசாரிக்கிறேன். குஜராத்தில் இருந்து வருவோரை ஏற்றுக் கொள்ள, பீகார் மாநிலம் தயாராக இல்லை என அறிவிக்கப்படுகிறது” என்று புலம்பியுள்ளார்.