அகமதாபாத்:
நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில்தான் கொரோனா மரண விகிதம் அதிகமாக உள்ளது. கொள்ளை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான திறனோ, தகுதியோ இல்லாமல் பாஜக மாநில அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.கொரோனா பற்றிய உண்மையான புள்ளிவிபரங்களை மறைத்து நோய்த் தொற்று மரண எண்ணிக்கையை குறைத்து தெரிவிக்கிறது.கொரோனா பாதிப்பின் குவிமையமாக அகமதாபாத் இருக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தை அனுமதித்த பின்னர், அகமதாபாத் மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும் வைரஸ் தொற்று பரவல் தீவிரமாகிவிட்டது. நர்மதா,கேதா, பஞ்ச்ம கால், பதான் மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் நோய்த் தொற்று அதிகரிக்கிறது.
தொற்று பாதிப்பில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது குஜராத். குஜராத் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்த பின்னரும், மத்திய அரசு உதவி செய்கின்ற போதிலும் ஆட்கொல்லி நோயைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.ஆனாலும், மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிடும் கொரோனா புள்ளிவிபரங்களில் ஜூன் 20 இல் இருந்து வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இறங்குமுகமாக காட்டப்பட்டுள்ளது. ஜீன் 25 இல் மாநிலத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 27000 என இருந்த போது 1753 பேர் இறந்தனர். இந்தியாவில், குஜராத்தில்தான் மரண விகிதம்அதிகமாக உள்ளது. சூரத்தில் 1142 பேர் பாதிப்புஎன்ற நிலையில் 142 பேர் இறப்பு; வதோதராவில் 620 பேருக்கு 48 பேர் மரணம்; காந்தி நகரில் 157 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த னர்; அங்கு இறந்தவர்கள் 27 பேர்; இந்தியா விலேயே அதிகமான அளவில் 100 (பாதிப்பு) க்கு8.01 பேர் மரணம் என்று அதிகமான அளவில் மரண விகிதம் குஜராத்தில்தான் இருந்தது.நாட்டின் உயர்மட்டத் தலைவர்களின் கோட்டையான குஜராத்தில் தொற்று நோய் நெருக்கடியை சமாளிக்க முடியாத மாநில அரசால் பாஜக தலைவர்களுக்கே சங்கடம் ஏற்பட்டுள்ளது.
தரவுகளில் குளறுபடி
குஜராத் அரசு கொரோனா தரவுகளில் குளறுபடி செய்வதாக அகமதாபாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் உயர்மட்டக்குழு ஆய்வு செய்த நான்கு மாவட்டங்களில் குஜராத்தும் ஒன்றாகும்.மக்கள் அடர்த்தி மிகுந்த அகமதாபாத் மாநகரில் போதுமான அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளாதது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறியத் தவறியதே தீவிரப் பரவலுக்கு காரணம் என்று அறிவித்தது.அகமதாபாத்தில் இருந்து வரும் வாகனங் கள் மற்ற மாநிலங்களில் நிறுத்தப்படுகின்றன. அகமதாபாத் மாவட்டத்திற்கு எதிரான உணர்வு மற்ற மாவட்டங்களில் நிலவுகிறது.ஊரடங்கின் ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பாதிப்பில் அகமதாபாத் ஹாட் ஸ்பாட்டாக இருந்தது.
அங்கு ஏற்பட்ட கடுமையான தொற்று பரவலுக்கு அறிவியல்பூர்வமான காரணங்களைக் கண்டறிய வேண்டியுள்ளது. முக்கியமாக, பல்லாயிரம் பேர் திரட்டப்பட்ட “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.புலம்பெயர் தொழிலாளர்கள் மிகப் பெரிய அளவில் குஜராத்தை விட்டு வெளியேறிவிட்டதால் தொழில் நிறுவனங்களில் கடுமையாக தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது.தொழில், விவசாய மண்டலங்களில் ஊரடங்குக்கட்டுப்பாடு கள் முழுமையாக தளர்வு செய்யப்படாத வரையில் அவர்கள் திரும்பி வரு வதற்கான வாய்ப்பில்லை. தற்போது நாற்பது சதவீத தொழிலாளர்களைக் கொண்டுதான் தொழில்நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்று கட்டுப்பாடு உள்ளது. இதுதொழில் நிறுவனங்களுக்கு பலத்த அடியாக மாறியுள்ளது.
பிரண்ட்லைன், ஜீலை,17,2020 இதழில்
அனுபமா கடகம் எழுதிய கட்டுரையிலிருந்து
- தொகுப்பு : ம.கதிரேசன்