tamilnadu

img

டிரம்ப் பேசி முடிக்கும் முன்பே காலியான படேல் மைதானம்!... கடுமையான வெயிலால் மக்கள் அவதி

அகமதாபாத்:
இரண்டு நாள் பயணமாக இந்தியா  வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்டு டிரம்ப்பிற்கு, வரலாறு காணாத வரவேற்பைக் கொடுத்து, அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போவதாக மோடி அரசு கூறியது. குறிப்பாக டிரம்ப்பை 70 லட்சம் பேர் திரண்டு வரவேற்பார்கள் என்று அறிவித்தது. டிரம்ப்பும், தான் அதனை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார். 

ஆனால், இடையிலேயே சுதாரித்துக் கொண்ட மோடி அரசு, “70 லட்சம் பேர்களெல்லாம் இல்லை; நாங்கள் சொன்னது 1 லட்சம்தான்” என்றுசுருதியைக் குறைத்தது. அதற்கேற்ப சர்தார் வல்லபாய் பட்டேல் மைதான த்தில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேரைத் தான் குஜராத் அரசு திரட்ட முடிந்தது. சோகம் என்னவென்றால், டிரம்ப் பேசி முடிப்பதற்கு உள்ளாகவே, மைதான த்தில் பாதிக் கூட்டம் காலியாகிவிட்டது என்பதுதான்.

‘நமஸ்தே’ என்று கூறி உரையைத் துவக்கிய டிரம்ப், இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர் என்றும், இந்திய மக்க ளின் ஒற்றுமை அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்கக் கூடியது என்றும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் பேசிக் கொண்டிருந்தபோது, வெயில் மண்டை யைப் பிளந்து கொண்டிருந்ததால், மைதானத்தில் உட்கார முடியாமல் பல ஆயிரக்கணக்கான மக்கள் தவியாய்த் தவித்துப் போய்விட்டனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கூட்டமாக கிளம்ப ஆரம்பித்துவிட்டனர். அவர்களை சமாதானப்படுத்த பாஜக-வினர் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை.இதனால், நிகழ்ச்சியின்போது நிரம்பி வழிந்த மைதானம், டிரம்ப் பேசி முடிப்பதற்கு உள்ளேயே பாதி காலியாகி விட்டது.