tamilnadu

img

குஜராத் பல்கலை.யில் ஏபிவிபி படுதோல்வி... 8-இல் 6 இடங்களை பறிகொடுத்தது

அகமதாபாத்:
குஜராத் பல்கலைக்கழக செனட் தேர்தலில், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) படுதோல்வி அடைந்துள்ளது.மொத்தம் 8 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 6 இடங்களில் ஏபிவிபி படுதோல்வி கண்டுள்ளது. காங்கிரசின் மாணவர்பிரிவான என்எஸ்யுஐ, வெற்றி பெற்றுள் ளது. ஏபிவிபி-க்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பாஜக ஆட்சி நடக்கும் குஜராத்தில், அதுவும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில், ஏபிவிபி அடைந்துள்ள இந்த தோல்வியானது, அவர்களின் பிளவுவாத கொள்கைகளுக்கு கிடைத்த அடி என்று காங்கிரஸ் மாணவர் பிரிவு கூறியுள்ளது. குஜராத் கல்லூரி, ஆர்.எச். படேல், ஆர்.ஜே. திப்ரேவால், எச்.கே. ஆர்ட்ஸ் மற்றும் ராஷ்டிரபாஷா கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் தேர்தலில் பங்கேற்றன. மொத்தம் 3 ஆயிரத்து 279 வாக்காளர்களில் 2218 பேர் வாக்களித்தனர்.