பிரேசிலின் அட்லாண்டிக் காடுகளில் வாழும் தவளை இனம் ஒன்று ஒளிரும் தன்மையை உடையவை என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
பம்கின் டாட்லெட்ஸ்(pumpkin toadlets) என்ற தவளை இனம் ஒளிரக்கூடிய பொருள்களை தன் எலும்புகளின் மீது கொண்டுள்ளது என ஆய்வு ஒன்றின்போது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வின தவளைகள் மிகச்சிறிய உடலமைப்பையும், அடர் நிறங்களையுடைய தோலையும் கொண்டது. மேலும், அவை விஷ தன்மை உடையவை.
இவ்வகை தவளைகள் இனச்சேர்க்கைக்காக எழுப்பும் ஒளியை கேட்க இயலாதவை என்பதை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் அவற்றின் எலும்புகளில் ஒளிரும் தன்மை கொண்ட பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அபுதாபியிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் இவ்வகை தவளைகளின் மீது புற ஊதாக்கதிர்கள் படும்போது மட்டுமே அவற்றின் ஒளிரும் தன்மை மனிதனின் கண்களுக்கு புலப்படும் என தெரிவித்துள்ளது.