செங்கல்பட்டு, ஜன. 6- செங்கல்பட்டு மாவட்டம் செய்யூட்டத்திற்குட்பட்ட வடப்பட்டினம் கிராமத்தில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் போலி மதுபானத்தால் பலர் உயிரிழப்ப தாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம இளைஞர்கள் மனு அளித்தனர். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் திங்களன்று (ஜன 06) மக்கள் குறைதீர்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரி டம் மனு ஒன்றை வழங்கினர் அந்த மனுவில் தெரி வித்திருப்பதாவது செய்யூர் வட்டம் வடப்பட்டினம் கிராமத்தில் 8 வரு டங்களுக்கு மேலாகக் கள்ளத்தனமாக போலி மது பானம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுவருகின்றது வடப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன், இராமச்சந்திரன், ரமா, பரிபூரணம், நதியா, சாந்தி, சரிதா, துரைராஜ் உள்ளிட்டவர்கள் அரசு மதுபானத் தைப் போன்று தோற்றமுடைய போலி மதுபானத் தைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். வடப்பட்டினம், கூவத்தூர், கடலூர் கிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்க ளும் பள்ளி மாணவர்கள்,வேலைக்குச் செல்லும் இளை ஞர்கள், முதியோர் என இந்த போலி மதுபானத்தால் சீரழிந்து வருகின்றனர். இந்த போலி மதுபானத்தால் கடந்த மாதம் சிலர் உயிரிழந்துள்ளனர், சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடப்பட்டினம் கிராமத்தில் போலி மதுபானம் விற்பனை செய்வது குறித்து கூவத்தூர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை மாறாக மனு கொடுத்த எங்க ளையே மது விற்பனை செய்பவர்களிடம் காட்டிக் கொடுக்கும் பணியைச் செய்கின்றனர். கிராமங்களை போலி மதுபானத்திலிருந்து பாதுகாக்க மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனத் தெரி வித்துள்ளனர்.