சாலை விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை
செங்கல்பட்டு, டிச.30- செங்கல்பட்டு மாவட்ட வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர்அ.ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில், செங்கல்பட்டு வட்டம், வில்லியம்பாக்கம், குன்னவாக்கம் கிராமங்களில் 21 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, மதுராந்தகம் கோட்டத் தில் சாலை விபத்தில் இறந்தவர் மற்றும் காயமடைந்த 10 நபர்களின் வாரிசுதாரர்க ளுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் தொகையாக ரூ.9 லட்சத்திற்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செய்யூர் வட்டத்தில் 5 பயனாளிகளுக்கு முதி யோர் உதவிதொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மதுராந்தகம் வட்டத்தில் 5 நபர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மதுராந்த கம் வட்டத்தில் 5 நபர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார். இதே போல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நென்மேலி சேர்ந்த வேலு குப்புசாமி என்பவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயகுமாரி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆம் கட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தல்
திருவள்ளூர், டிச.30- திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் திங்களன்று (டிச.30) நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களான புழல், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் மற்றும் வில்லிவாக்கம் என 1174 வாக்குச்சாவடிகளில் நடை பெற்ற தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்க ளித்தனர். எல்லாபுரம் ஒன்றியம் கொமக்கம்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
டெங்கு கொசு: தனியார் மருத்துவமனைக்கு அபராதம்
ஆலந்தூர்,டிச.30- ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், வீடுகளில் சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மண்டல நல அலுவலர் மல்லிகா, சுகாதார அலுவலர் கண்ணன், ஆய்வாளர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள், குப்பைகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.