tamilnadu

img

ஹூவாய் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் செயல்பட முடியாது!

அமெரிக்க அரசின் உத்தரவால், ஹூவாய் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் இணைந்து வர்த்தகம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஹூவாய் நிறுவனம் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அதே சமயம், ஹூவாய் நிறுவனத்தின் தொழில்நுட்ப சாதனங்களால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது என்று அமெரிக்க குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் ஹூவாய் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களை அமெரிக்காவில் செயல்பட முடியாத அளவிற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடையால் கூகுள் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் இணைந்து வர்த்தகம் செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஹூவாய் ஃபோன்களில் கூகுள் மேப்ஸ் மற்றும் யூடியூப் செயலிகள் செயல்படாது என்றும் கூறுகின்றனர். இதனால் ஹூவாய் போன்களின் விற்பனை குறையும் என்று கூறப்படுகின்றது.

இதை அடுத்து, ஹூவாய் நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளை உலகம் முழுவதும் எந்த நாடும் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்கா கூறிவருகிறது. மேலும் சைலிங்ஸ் இங் உள்ளிட்ட மற்ற அமெரிக்க நிறுவனங்களும் அந்நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் உருவாகி உள்ளது.