மத்திய அரசு அறிவித்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு எப்சி கட்டண அபராத தொகை ரூ.5,000 முதல் 10,000 வரை வசூலிப்பதை கைவிட வலியுறுத்தியும் வாகன பரிசோதனை என்ற பெயரில் ஆட்டோக்கள் சிறை பிடிப்பதை கண்டித்தும், ஆட்டோ தொழிலாளர்களை தரக்குறைவாக பேசும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களைக் கண்டித்தும் வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ராn ஜந்திரன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.முரளி துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் நிறைவு செய்து பேசினர். மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர், காமராஜ்,சுரேஷ்குமார், கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.