வேலூர், ஏப்.13-அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து, சிபிஎம் சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் என்.காசிநாதன், ஆர்.வெங்கடேசன், தாலுகா குழு உறுப்பினர் கே.சிவக்குமார், எம்.ராஜா, ரகுநாத், டி.ரமேஷ், ஆகியோர் நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், பேரூராட்சி மற்றும் ஒன்றிய கிராமங்களில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கெண்டனர்.அரக்கோணம் தாலுகா குழு சார்பில் செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் குருவராஜப்பேட்டை, வளர்புரம்,சாலை, இச்சிப்புத் தூர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தனர். சீனிவாசன், சுந்தரமூர்த்தி, டில்லி, ஞானமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆரணி தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்துக்கு வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செய்யாறு பகுதியில் வீடு,
வீடாக பிரச்சாரம் நடந்தது. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.