விக்கிரவாண்டியில் உள்ள குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்டது மனிதக் கழிவு அல்ல தேன் அடை என தெரியவந்துள்ளது.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் கஞ்சனூர் அருகே உள்ள கே.ஆர்.பாளையம் திறந்தவெளி குடிநீர் கிணற்றில் மலம் கலந்திருப்பதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கிணற்றில் இருந்தது தேன் அடை என தெரியவந்துள்ளது.