விருதுநகர், ஜூலை 26- கொரோனா பாதிப்பால் விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் குறைந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.2,650 க்கு விற்பனை செய்யப்பட்ட 15 கிலோ கடலை எண்ணெய் ரூ.2, 600ஆக குறைந்துள்ளது. ஒரே வாரத்தில் டின் ஒன்றுக்கு விலை ரூ.50 குறைந்தது. பாமாயில் விலை ரூ70 வரை உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம் மக்கள் கடலை எண்ணெய் பயன்பாட்டை குறைத்து பாமாயிலை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். துவரம் பருப்பு புதுஸ் நாடு ரகம் 100 கிலோ கடந்த வாரம் ரூ.7,900க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.7,700 ஆக குறைந்துள்ளது. நயம் துவரம் பருப்பின் விலை மூடைக்கு ரூ.100 குறைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து உளுந்தம் பருப்பு வரத்து குறைந்ததால் அதன் விலை மூடைக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது.