உளுந்தூர்பேட்டை, ஆக. 16- உளுந்தூர்பேட்டை நகரில் மந்தகதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட் டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூர் பேட்டை நகர மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண் டப்பட்டு சேதமடைந்துள்ள அனைத்து சாலை களையும் செப்பனிட வேண்டும், சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவர்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டத்தில் 20.6.2019 அன்று உறுதி யளித்தபடி 20 ஆழ்துளை கிணறுகள், 22 பழு தான போர்வெல், செயல்படாமல் நகரம் முழு வதும் உள்ள 25க்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் தொட்டி, அதற்கான மோட்டார்கள் அனைத் தையும் சீரமைக்க வேண்டும், குடிநீர் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும், நகரம் முழுவதும் இலவச பொது கழிப்பிடங்கள் அமைத்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 31 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலாளர் கே.தங்கராசு தலைமை தாங்கினார். நகரக் குழு உறுப்பி னர் பி.ஸ்டாலின் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், எம்.சுப்பிர மணியன், பி.ஆர்.நாராயணசாமி, ஐ.ஷேக் சலாவுதீன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன், எம். ஆறுமுகம், டி.எம்.ஜெய்சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கே.பழனி, ஏ.தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இ. சதீஷ்குமார் நன்றி கூறினார்.