விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட மயிலம் அருகே பேரணி கிராமத்தில் பொங்கலையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பில், தெருக்கூத்து கலை விழா நடைபெற்றது. விழாவுக்கு மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.மாசிலாமணி தலைமை தாங்கி தெருகூத்து நாடக கலைஞர்களுக்கு நாடகச் செம்மல் விருதுகளை வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவநாதன், சேகர், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.