tamilnadu

img

பாக்கி கேட்டு போராடிய கரும்பு விவசாயிகள் கைது

விழுப்புரம், ஜன. 3- விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் இரண்டு ராஜஸ்ரீ  சர்க்கரை ஆலைகள் கடந்த ஆண்டு அரவை செய்த கரும்  புக்கு 50 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். செஞ்சி வட்டத் தில் உள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை 6  கோடி ரூபாய் விவசாயி களுக்கு தர வேண்டும். பாக்கியை  கேட்டு செஞ்சி ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை முன்பு நூற்றுக்கும் மேற்  பட்ட கரும்பு விவசாயிகள் ஜன.3  அன்று காலை முதல் காத்திருக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பொங்க லுக்குள் பணத்தை தருவதாகக்  கூறினர். இதை எழுத்துப்பூர்வ மாக கொடுக்கும் வரை காத்தி ருப்பதாகக் கூறி ஆலை வாயி லில் அமைதியாக காத்திருந்த  விவசாயிகளை காவல்துறையி னர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.   காவல் உதவி ஆய்வாளர் வி.வேலுமணி மாநில நிர்வாகி  பலராமன், சிவன் ஆகியோரை  தரதரவென்று இழுத்து தள்ளி யதில் சிவன் காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு சிவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆலை சங்கத்  தலைவர் டி.ஆர்.குண்டுரெட்டி யார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், மாநில நிர்வாகிகள் ஜனார்த்தனன், பலராமன், வேல்மாறன் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்டத் தலைவர் சிவராமன், ஆலை செயலாளர் தமிழரசன், துரைசாமி, வரதராஜன் உட்பட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் டி. ரவீந்திரன்,“ கரும்பு  விவசாயிகள் கடந்த ஆண்டு அனுப்பிய கரும்புக்கு ராஜஸ்ரீ தரணி, சக்தி ஆகிய மூன்று நிர்வா கங்கள் எட்டு சர்க்கரை ஆலைகள் 180 கோடி ரூபாய் எப்.ஆர்.பி., பாக்கி வைத்துள்ளனர்.  கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி  14 நாட்களில் கொடுக்க வேண்  டிய கரும்பு பணத்தை ஓராண்டாகி யும் தராததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பொங்கலுக்கு முன்பாக எப்.ஆர்.பி. பாக்கி முழுவதையும் விவ சாயிகளுக்கு பெற்றுத்தர மாநில  அரசு, சர்க்கரைதுறை ஆணையம்  சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலி யுறுத்தியிருக்கிறார்.

;