tamilnadu

img

வயர்லெஸ் இயர்பட்ஸ் கருவியை அறிமுகம் செய்த கூகுள்

கூகுள் நிறுவனம் பிக்சல் பட்ஸ் 2 என்ற வயர்லெஸ் இயர்பட்ஸ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. 

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த பிக்சல் பட்ஸ் 2 வயர்லெஸ் இயர்பட்கள்,  காதுகளில் சவுகரியமாக பொருந்தி கொள்ளும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி ஹைப்ரிட் வடிவமைப்பு கொண்டிருப்பதால், காதுகளில் இருக்கும் போது அசவுகரியத்தை ஏற்படுத்தாது. அத்துடன், அடாப்டிவ் சவுண்ட் அம்சம் கொண்டிருக்கிறது. இது பயனர் இருக்கும் சூழலுக்கு ஏற்ப சத்தத்தை மாற்றியமைக்கும். இதில் டூயல் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இது பின்னணியில் உள்ள சத்தத்தை குறைக்கும். இதில் உள்ள வாய்ஸ் அக்செல்லோமீட்டர் அதிக காற்றோட்டமான பகுதிகளிலும் குரலை மிகத் தெளிவாக கேட்க வழிசெய்யும். பிக்சல் பட்ஸ் நீண்ட தூர ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு போன் அருகில் இல்லாத போதும் இணைப்பில் இருக்கும்.

மேலும், ஆட்டோமேடிக் டிடெக்‌ஷன், பிளே, பாஸ், வால்யூம் மாற்ற டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளன. பிக்சல் பட்ஸ் 2 கருவியில், வழங்கப்பட்டுள்ள பில்ட் இன் பேட்டரி தொடர்ச்சியாக ஐந்து மணி நேரத்திற்கு பயன்படுத்த வழி செய்யும். பிக்சல் பட்ஸ் வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இந்த கருவியை அடுத்த ஆண்டு அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.