tamilnadu

img

மாநில உரிமைகளைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்த வரைவை நிறுத்தி வையுங்கள்

பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை,மே 9- மாநில உரிமைகளைப் பறிக்கின்ற, பொதுமக்கள் நலனுக்கு எதிரான   மின்சார சட்டத்திருத்த வரைவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மே 9 சனிக்கிழமையன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:  மின்சார சட்டத்திருத்த வரைவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய மின்துறை அமைச்சகம், அனைத்து மாநி லங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டுள்ளது. தன்னிச்சை யாக இயங்கும் மின்துறையைக் கொண் டுள்ள தமிழக அரசு சார்பாக, இதுகுறித்து சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்பு கிறேன்.

12.11.2018 அன்று நான் உங்களுக்கு ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் மின்சார சட்டத்திருத்த வரைவு மாநில அரசின் சில உரிமைகளைப் பறித்துவிடும் என்று கூறியிருந்தேன். இந்த சட்டத்திருத்த வரைவு, மின்விநியோகம் முழுவதையும் தனியார்மயமாக்குதல் போன்ற திருத் தங்களை உள்ளடக்கியுள்ளது. இது பொது மக்கள் நலனுக்கு எதிரானதாகும். இந்த சட்டத்திருத்த வரைவு, விவசா யம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுக்கு நேரடி பணப் பரிமாற்றம் (DBT) மூலம் மானியம் வழங்குவதற்கான அம்சத்தைக் கொண்டுள் ளது. மின்சாரத்துறையில் இதனை நடை முறைப்படுத்துவது சிரமமானது. இது விவ சாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதி ரானது என ஏற்கெனவே எழுதியுள்ள கடி தத்தில் குறிப்பிட்டுள்ளேன். விவசாயிகள் இலவச மின்சாரத்தைப் பெற வேண்டும் என்பதும், அதற்கான மானியத்தைச் செலுத்தும் முறையைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசிடமே இருக்க வேண்டும் என்பதும் எங்கள் அரசின் நிலையான கொள்கை.

ஆணையத்தின் கட்டமைப்பை மத்திய அரசு தீர்மானிப்பது, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்க முயல்வதாகும். இது, அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்து வத்திற்கு எதிரானதாகும். மத்திய மற்றும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணை யங்களால் தீர்வு காணப்பட்ட அனைத்து விதமான ஒப்பந்தச் சிக்கல்களுக்கும், இனி மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள மின் ஒப்பந்த அமலாக்க ஆணையமே தீர்வு காணும் என சட்டத்திருத்தத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது. இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும். மேலும், அந்த அமைப்பையே இல்லாமல் ஆக்கிவிடும். அனைத்து மாநில அரசுகளும் கொரோ னாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளதால், இச்சட்டத்திருத்தம் குறித்து விரிவான பதில்களை அனுப்ப மேலும் கால அவகாசம் வேண்டும். அதேசமயம், மின்சார சட்டத்தில் எந்தவொரு அவசர திருத்தங்களும் சிரமங்களை உரு வாக்கக்கூடும். சட்டத்திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள், பொதுமக்களை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பாதிக்கும் என்பதால், இந்தத் திருத்தங்களை கொண்டு வருவதற்கான தகுந்த நேரம் இதுவல்ல. எனவே, இந்த சட்டத்திருத்தங்கள் குறித்து மாநில அரசுகளுடன் விரிவாக விவா திக்கப்படும் வரை சட்டத்திருத்த வரைவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.