tamilnadu

img

மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்வைப்பு

வேலூர்,ஆக.1- வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தேர்தல் குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. வேலூர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9 அன்று நடைபெறும். இந்நிலையில் வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தாக கூறி, அது தொடர்பான புகாரின்பேரில் அதிகாரிகள் அந்த தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.