tamilnadu

img

வழிப்பறியில் ஈடுபடும் டோல்கேட் - பாஸ்டேக் பணப்பறிப்பால் வாடகை வாகனங்கள் தவிப்பு

சுங்கசாவடிகளில் பாஸ்டேக் கட்டண நடைமுறை கட்டாய மாக்கப்பட்டுள்ளதால் வாடகை வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். டோல்கேட்டில் காலதாம தத்தை தவிர்க்கவே பாஸ்டேக் முறை என்று அரசு தரப்பில் சொன்னாலும் உண்மையில் கட்டாய பணப்பறிப்பு நட வடிக்கையே இந்த பாஸ்டேக் என்கின்ற னர் வாகன ஓட்டிகள். நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலை களில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக 522 சுங்க சாவடிகள் (டோல் கேட்) மத்திய  அரசால் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட  சுங்கச்  சாவடிகள் உள்ளது. இந்த சுங்கசாவடி களை தினசரி சராசரியாக 1 கோடியே 40 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தி வரு கின்றன. சுங்கச்சாவடிகளில் வாகனங் கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பாஸ்டேக் எனும் மின்ணணு  கட்டண முறை அறிமுகம் செய்யப்பட் டது. அத்தோடு அனைத்து வாகனங்க ளும் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவது கடந்த டிசம்பர் மாதம் முதல்  கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் பாஸ் டேக் அட்டைகள் பெறுவதில் ஏற்பட்ட சிர மங்களால் கால அவகாசம் நீட்டிக்கப் பட்டது. தற்போது சுங்கச்சாவடிகளில் பாஸ் டேக் மற்றும் பாஸ்டேக் இல்லாத வாக னங்கள் செல்வதற்கு தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்டேக் இல்லாமல் செல்லும் வாகனங்களுக்கு இரட்டிப்பு சுங்க கட்டணம் வசூலிக்கப் படுகிறது. கோவையை பொறுத்தவரை கணியூர் மற்றும் நீலம்பூர் சுங்க சாவடி களில் சுமார் 50 சதவிகிதத்திற்கும் அதிக மான வாகனங்கள் பாஸ்டேக் கட்டண  முறையில் செல்கின்றன. பாஸ்டேக் கட் டண முறையால் சுங்க சாவடிகளில் அதிகம் காத்திருக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டுள்ளதாக டோல்கேட் பரா மரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் பாஸ்டேக் அட் டையை ஸ்கேன் செய்யும் சென்சாரில்  ஏற்படும் கோளாறு போன்றவற்றால்  பணம் கொடுத்து செல்வதை காட்டிலும்  பாஸ்டேக் வழித்தடத்தில் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டு காலவிரயம் ஆகி றது என்கின்றனர் வாகன ஓட்டிகள். அதேபோல் உள்ளூர் வாகனங்க ளுக்கு விதிவிலக்கு, பதிவு செய்தும் பாஸ் டேக் அட்டை கிடைக்காமை, பதிவு செய் வோரிடம் ஏஜென்சிகள் கூடுதல் கட்ட ணம் வசூலிப்பது, இரண்டு முறை கட் டண பிடித்தம் உள்ளிட்டவற்றால் பல் வேறு புகார்கள் எழுந்துள்ளது. தற்போது  ஏற்பட்டுள்ள தொழில்நசிவு, தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைவு, தொழில் துறை முடக்கம் போன்ற பல்வேறு கார ணங்களால் வாடகை கிடைக்காமல் பொதுப்போக்குவரத்து வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்கள் திணறிவரும் நிலையில் பாஸ்டேக் கட்டண முறை கூடு தல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கிக் றனர்.  ஆகவே, பொதுப்போக்குவரத்து வாக னங்களுக்கு பாஸ்டேக்கில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். பாஸ் டேக்கில்லாத வாடகை வாகனங்களுக்கு  இரட்டிப்பு கட்டணம் வசூலிக்ககூடாது என்ற கோரிக்கைகள் எழ துவங்கியுள் ளன. இதுகுறித்து தமிழ்நாடு சாலை  போக்குவரத்து சம்மேளன பொதுச்செய லாளர் எஸ்.மூர்த்தி கூறுகையில், தமிழ கத்தில் 46 ஆக இருந்த சுங்க சாவடிகள் தற்போது 53 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் இந்திய அளவில் 326 சுங்க சாவடி கள் இருந்தன. தற்போது 500க்கும் மேற் பட்ட  சுங்க சாவடிகள் உள்ளன.  பாஸ்டேக் கட்டண முறையால் சுங்க  சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்படும் காலவிரயம் குறையும் என்பதால் இது வர வேற்க வேண்டிய நடைமுறையே. ஆனால் பாஸ்டேக் முறையிலிருந்து பொதுப்போக்குவரத்து வாகனங்க ளுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும். ஏனெனில் வாடகை வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை இதுவரை வாடிக்கை யாளர்களிடம் வாங்கியே வாகன ஓட்டி கள் கட்டி வந்தனர். ஆனால் பாஸ்டேக்  நடைமுறையால் சுங்க கட்டணத்தை அவர்களிடம் வாங்க முடியாத சூழல் ஏற் பட்டுள்ளது. இதனால் கூடுதல் செலவு ஆகிறது. அதேபோல் ஒன்று அல்லது இரண்டு வாகனங்களை வைத்து வாட கைக்கு ஓட்டுபவர்களுக்கு வங்கிகளில் பணம் செலுத்தி பாஸ்டேக் அட்டை பெறு வது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. தற்போது பாஸ்டேக் நடைமுறை கட்டா யமாக்கப்பட்டுள்ளதால் இரட்டிப்பு  கட்டணம் செலுத்தியே செல்ல வேண் டியுள்ளது. பழைய நடைமுறையில் போவதற்கும்,வருவதற்கும் தனித்தனி யாக சுங்க கட்டணம் செலுத்தலாம். ஆனால் தற்போது இருவழி கட்டணத்தை  ஒரே தவணையில் செலுத்த வேண்டியுள் ளது. இதனால் 50 சதவிகிதத்திற்கும்  மேல் கட்டணம் அதிகமாகிறது.  அதேபோல் ஒருமுறை சுங்க கட்ட ணம் செலுத்தி ஒருநாள் முழுவதும் சுங்க சாலையை பயன்படுத்த முடியும். தற் போது அது பறிபோயுள்ளது. தொழில் நெருக்கடி, பணப்புழக்கமின்மை போன்ற காரணங்களால் பாஸ்டேக்கை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது ஒருபுறமிருக்க இருசக்கர வாகனம்  துவங்கி எந்த வாகனம் வாங்கும் போதும் 15 வருடத்திற்கு ஆயுட்கால சாலை வரி என்று பணத்தை பெற்றுக்கொள்கின்ற னர். இதனை கட்டினால்தான் வாகனம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.  இப்படி வாகனம் வாங்கும் போதே சாலை வரியையும் கட்டிவிட்டு நாள்தோறும் டோல்கேட்டில் தண்டம் அழுக வேண் டும் என்பது அப்பட்டமான வழிப்பறி நடவடிக்கையாகும். சாலை வசதி செய்து தர வேண்டிய அரசு தனது பொறுப்பை தனியாருக்கு கொடுத்துவிட்டு கட்டண கொள்ளைக்கு கதவை திறந்துவிடுவதை எப்படி ஏற்கமுடியும். மேலும், தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளின் ஒப்பந்த காலம் முடிந்த நிலையிலும் அவற்றில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் உள்ளூர் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிகப்படுவதில்லை. சுங்கசாவடிகளில் வெளிப்படைத்தன் மையை அதிகரிக்கவும், கால விரயம்,  ஊழியர்களுடனான வாக்குவாதம் போன்றவற்றை தடுக்கவும் அறிமுகப்ப டுத்தப்பட்ட பாஸ்டேக் முறை அவசர கதியில் நடைமுறைப்படுத்தப்பட்டதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. சுங்கசாவடிகளை முறைப்படுத்தி, சட்டப் படி செய்து தரவேண்டிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராமல் அபரா தம் வசூலிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டு வது கண்டிக்கத்தக்கது  என்றார். - அ.ர.பாபு

;