காபி குடிப்பதால் விளையாட்டுத் திறன் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
காபி குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றம் குறித்த ஆய்வில் லண்டன் கான்வென்ட்ரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆய்வின் முடிவுகள் நியூட்ரியன்ட்ஸ் எனும் ஆய்விதழில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வுக்கு 19 ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு காபி, சத்து மாத்திரை கரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வெறும் தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன. ஒரு சிலருக்கு எதுவுமே அளிக்கப்படவில்லை.
5 கி.மீ. சைக்கிளிங் செல்லும்போது காபி குடித்த ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்திறன், மற்ற இரண்டு வகையினரைக் காட்டிலும் முறையே 9 நொடிகள் மற்றும் 6 நொடிகள் அதிகமாக இருந்தது. தண்ணீர் குடித்தவர்களுக்கும் எதுவுமே உட்கொள்ளாதவர்களுக்கும் இடையேயான செயல்திறனில் எந்த வேறுபாடும் இல்லை.
இதற்கு காபியில் உள்ள காபின் மூலப்பொருளே காரணம். காபி குடிக்கும் போது நேர்மறையாக தூண்டப்படும் உடலின் செயல் துறை குறித்து இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.