tamilnadu

img

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைப்பு -ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை  0.25 சதவிகிதம்  குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 
மும்பையில் இன்று நடந்த நிதிக் கொள்ளை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவிகிதத்தில் இருந்து  5.75 சதவீதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.5 ஆகவும் வங்கி ரேட் 6 சதவிகிதமாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீட்டு கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.
 கடந்த 6 மாதத்தில் 3வது முறையாக ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.