விதிமுறைகளை அப்பட்டமாக மீறி மோடி அரசு ஊழல்
புதுதில்லி, ஜன. 17 - ரூ. 45 ஆயிரம் கோடி மதிப்புள்ள ‘75-ஐ நீர்மூழ்கிக் கப்பல்’ தயாரிப்புத் திட்டத்தில், அதானி குழுமத்திற்கு சாதக மாக, மோடி அரசு விதிகளை மாற்றி யிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி யுள்ளது. அதாவது, ரூ. 45 ஆயிரம் கோடி மதிப்பி லான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு காண்ட்ராக்ட், ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (Hindustan Shipyard Limited - HSL) நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எச்எஸ்எல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக- இந்தத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ‘அதானி டிபென்ஸ் ஜே.வி’ (Adani Defence JV) விதி களை மீறி சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, காங்கிரஸ் ஊடகக் குழுவின் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜே வாலா, இந்த குற்றச்சாட்டை எழுப்பி யுள்ளார்.
இந்திய கடற்படையால் அமைக்கப் பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை மோடி அரசும், பிரதமர் அலுவலகமும் மீறிவிட்டதாக தெரி-வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் கட்டுப்பாட்டாளர் தலைமையிலான இந்திய கடற்படையின் அதிகாரமளித்த குழு அதானியின் முயற்சியை ஏற்கெனவே நிராகரித்து இருந்தது. ஏனெனில் அவ ரது நிறுவனம் தகுதி வாய்ந்ததாக இல்லை. இருப்பினும், பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை - 2016 (டிபிபி)-ஐ மீறி, அதானி டிபென்ஸ் ஜே.வி., இந்த திட்டத்தில் பங்கேற்க மோடி அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்திய கடற்படையின் அதிகார மளித்த குழு இரண்டு நிறுவனங்களை பட்டியலிட்டது - 1) அரசாங்கத்திற்கு சொந்தமான மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் மற்றும் 2) தனியாருக்குச் சொந்த மான லார்சன் மற்றும் டூப்ரோ (எல் அண்ட் டி நிறுவனம்). ஆனால் பிரதமர் அலுவலகமோ, வலுக்கட்டாயமாக ‘அதானி டிபென்ஸ் ஜேவி’யை அனு மதித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற வேண்டு மெனில் இரண்டு முக்கிய அளவு கோல்கள் நிறைவேற்றப்பட வேண்டும். 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ‘கிரெடிட் ரேட்டிங்கில் ‘ஏ’ பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சகம் ஸ்பெஷல் பர்பஸ் வெஹிக்கிள் என்பதை அனுமதித் திருக்க வேண்டும். மேலும், ரூ. 1000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள திட்டத்தில் பங்குபெறும் நிறுவனம் ‘ஏ’ அல்லது ‘ஏ +’ தகுதி கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், ரூ. 45 ஆயிரம் கோடி மதிப்புள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிப்பதற்கான ஒரு திட்டம் “பிபிபி” கிரேடு கொண்ட, அதுவும் கப்பல் கட்டுவதில் எந்த அனுபவமும் இல்லாத அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது? இங்குதான் ஊழல் நடைபெற்றுள்ளது.” இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார். நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் குற்றச் சாட்டுக்கு மோடி அரசு பதில் கூற வேண்டும் என்று சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.