tamilnadu

img

ஆசிய மல்யுத்த போட்டியில் அமித் தங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்

ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் அமித் தங்கர் 74கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.


இந்தாண்டின் ஆசிய மல்யுத்த போட்டிகள் சீனாவின் சியான் நகரத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். இந்நிலையில் இன்று நடந்த 74 கிலோ எடைப்பிரிவிற்கான இறுதிப்போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் அமித் தங்கரும், கஜகஸ்தான் நாட்டு வீரர் தனியர் கைசானவும் மோதினர். இதில் இந்திய வீரர் அமித் தோல்வியுற்றார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அமித் தங்கர் கடந்த 2013ல் நடந்த ஆசிய மல்யுத்த போட்டியில் 6 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றவர். மேலும், தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆசிய மல்யுத்த போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


;