அருண்குமார் நரசிம்மன் ஒவ்வொரு முறையும் மழையோ, புயலோ அல்லது வானிலையில் ஏற்படும் எந்த மாற்றங்கள் ஏற்பட்டால் போதும் தொலைக்காட்சியையோ வானொலியையோ அல்லது சமுக ஊடகங்களில் வானிலை தகவலை தேடி அலையும் நிலை உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நீங்களும் வானிலை பற்றி உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ தெளிவாக கூற முடியும். இந்திய வானிலை ஆய்வு மையம் www.imdchennai.gov.in என்ற இணையதளத்தை பல வருடங்களாக நடத்தி வருகிறது, இந்த இணையதளத்தை வானிலை தகவல்களுக்கான சுரங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த இணையதளத்தில் நாடு முழுவதும் உள்ள வானிலை ஆய்வு மையங்களில் பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் தானாகவே பதிவேற்றம் செய்யும் வசதியை செய்துள்ளது. உதாரணமாக, உங்கள் ஊரில் தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்று தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தில் உள்ள வானிலை குறித்த செயற்கைகோள் புகைப்படத்தை (https://mausam.imd.gov.in/imd_latest/contents/satellite.php) பார்த்தால் நம் நகரத்தின் மேல் இருக்கக்கூடிய மேகங்களின் நிலையை பற்றியோ அல்லது புயலை பற்றியோ தெரிந்துகொள்ள முடியும். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்கள் இந்த இணைய தளத்தில் உள்ளன, இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியா முழுவதும் தானியங்கி வானிலை நிலையங்களை (http://aws.imd.gov.in:8091/) நிறுவியுள்ளது. இந்த தானியங்கி வானிலை நிலையங்கள் பல முக்கியமான வானிலை சம்பந்தமான தகவல்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கின்றன.
நீங்கள் உங்கள் ஊரில் தற்போதைய வெப்பநிலை, காற்றின் வேகம், காற்றின் திசை, வளிமண்டல அழுத்தம், கடலில் உள்ள அழுத்தம், ஈரப்பதம் மற்றும் மழையின் அளவு போன்ற பல தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் நம் நாட்டில் சென்னை, காரைக்கால், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், மும்பை, நாக்பூர் உள்பட 29 நகரங்களில் உயரமான கட்டிடங்களின் மீது ரேடார்களை (https://mausam.imd.gov.in/imd_latest/contents/index_radar.php?id=Chennai) நிறுவியுள்ளது.
இந்த ரேடார்கள் உள்ள இடங்களிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள மேகங்களைஉடனுக்குடன் படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றும். இதன் மூலம் நாம் மேகங்களை பற்றி தெரிந்துகொள்வது மட்டுமல்லாது மழை வருவதற்கான வாய்ப்புகள், வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அறிந்துகொள்ளலாம். வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் (http://www.imdchennai.gov.in/fisheries.html), விவசாயிகள் (http://www.imdchennai.gov.in/agrocomp.pdf),வானூர்தி இயக்குபவர்கள் என்று பல்வேறுதரப்பட்ட மக்களுக்கும் தினம்தோறும் ஆய்வு அறிக்கைகளைவெளியிடுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்துவிடும். ஒருவர் மாநிலத்தின் ஒரு இடத்திலிருந்துமற்றொரு இடத்திற்கு செல்லும்போது வானிலை ஆய்வு மையத்தின் சிறப்பு வானிலை எச்சரிக்கையை (http://www.imdchennai.gov.in/hfc.pdf) பார்த்து தங்கள் பயணத்தினை திட்டமிடலாம். வானிலையை பற்றி முழுவதும் தெரியாத நபராக நீங்கள் இருந்தாலும் இந்த இணைய சேவையை பயன்படுத்தி ஓரளவுக்கு இந்த விடயங்களை நீங்கள் தெரிந்து பயன்பெறலாம்.