tamilnadu

img

மஞ்சப்பை அவமானம் அல்ல: முதல்வர்

பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் ஏழை-எளிய நடுத்தர  மக்களுக்கு ரூ.505 மதிப்புள்ள பரிசுத்தொகுப்பு அரிசி குடும்ப  அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. ஒரு கோடியே 15 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். இந்த தொகுப்பு அனைத்து ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.  ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட உள்ளதால் அதற்கு முன்னதாக கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்கள் தினமும் 200 பேர் வீதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேசன் கடைகள் மூலம் வினியோகிக்கப்பட உள்ளது.

சென்னை, டிச.23- தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித் தார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் வியாழனன்று(டிச.23) தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளா ஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடி யாகக் குறைக்க வேண்டும். மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது” என்றார். ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் சூழலை மாசாக்கு கின்றன. பிளாஸ்டிக்கை மண்ணில்  போட்டால் அது மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண்  பாதிக்கப்படுகிறது. மண் பாதிக்கப் பட்டால் வேளாண்மை பாதிக்கப்படு கிறது. கால்நடைகள் அதைச் சாப்பிட்டு உயிரிழக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். சமூக வலைதளங்களிலும் இடை விடாது பரப்புரை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அரசாங்கம் மட்டுமே  பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து விட முடியாது. மக்கள் நினைத்தால்  மாற்றத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியும். எனவே மஞ்சப்பைதான் சிறந்தது. அனைத்துத் தொழில்களிலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரி வித்தார்.