போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் எழுத்தாளர் இமையம் கையெழுத்திட்டார். இதில் மாவட்டத் தலைவர் கே.சின்னதம்பி, மாவட்டச் செயலாளர் எஸ்.வினோத்குமார், கம்மாபுரம் ஒன்றிய பொருளாளர் கே.சிவனாந்த், விருத்தாசலம் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வக்குமார், மார்க்கெட் சேகர், வெங்கடேசன் மற்றும் முன்னாள் மாநில நிர்வாகி என்.எஸ்.அசோகன்,முன்னாள் மாவட்ட நிர்வாகி ஆர்.கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.