tamilnadu

img

காலிப்பணியிடங்களை திட்டமிட்டு நிரப்ப மறுப்பது யாருடைய நலன் காக்க?

மதுரை, டிச.18- மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத் துறைகளைப் பாதுகாக்க மின்வாரியத்தில் ஓய்வு பெற்றோர் தாங்கள் வசிக்கும் பகுதியில் “அரசி யல் ரீதியாக களமாடி” பகுதி மக்க ளிடம் நாட்டின் நிலைமையை எடுத் துச் சொல்லி அவர்களை ஓரணியில் திரட்ட வேண்டுமென சிஐடியு மாநி லப் பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன் வலியுறுத்தினார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் எட்டா வது வெள்ளிவிழா மாநில மாநாடு மதுரையில் தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நினைவரங்கில் (மடிசியா ஆடிட்டோரியம்) சனிக்கிழமை தொடங்கியது. மாநாடு ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெறு கிறது. மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாநிலப்பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசியதாவது:- மின்வாரிய திருத்த மசோதா நிறைவேறினால் கிராமங்கள் இரு ளில் மூழ்கும். எம்ஜிஆர் கொண்டு வந்த குடிசைகளுக்கு ஒற்றை விளக்கு இலவச மின்சாரம், திமுக அரசு கொண்டு வந்த ஐந்து  குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரம், அதிமுக அரசு கொண்டுவந்த 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை வழங்குவது எல்லாம் கேள்விக்குறியாகும். தமிழகத்தில் 3 கோடியே 37 லட் சத்து 54 ஆயிரத்து 18 மின் நுகர் வோர் உள்ளனர். தமிழகத்தின் மின் தேவை 16,418 மெகாவாட். மொத்த மின் இணைப்புகள் 3 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரத்து 848 உள்ளன. மின்வாரியத்தில் அடிப்படைப்பணி களுக்காக அனுமதிக்கப்பட்ட பணி யிடங்கள் 1,46,631. பணியில் இருப்ப வர்கள் 89,754. காலிப் பணியிடங்கள் 56,877.

டிஜிட்டல் மின் மீட்டர்கள் வீட்டில் பொருத்தப்பட்டால் மின் கணக்கீட்டா ளர், காசாளார், கணக்காளர், கணக்கு மேலாளர் போன்ற துறைகள் காணா மல் போகும். விஞ்ஞானத்தின் தேவையை மறுதலிக்க முடியாது. ஆனால், செய்து கொண்டிருக்கும் வேலைக்கு அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். விஞ்ஞானப் பூர்வ அடிப்படையில் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு களை வழங்க வேண்டும். அரசுகள் திட்டமிட்டு மின்வாரி யம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. இதற்குக் காரணம் குறைந்த பணியாளர்கள் இருந்தால் சம்பளம் கொடுப்பது மிச்சம். வேலை யும் நடைபெறும். இதைப் பயன் படுத்த துறையை எளிதில் கார்ப்ப ரேட்டுகளிடம் விற்றுவிடுவதுதான் நோக்கம். தமிழகத்தில் மின்துறையில் காலிப் பணியிடங்கள் 56,877 உள் ளன. தென்னக ரயில்வேயில் சுமார் 2.25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப அரசுகள் முன்வர வேண்டும்.

பொதுவாக மேம்பூச்சு வேலை களே நடைபெறுகின்றன. அதே நேரத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாற்பது விவசாய சங்கங்கள் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டு ஒரு வருடம் போராடி வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வைத்துள்ளன. தமிழகத்தில் போக்கு வரத்து, மின்சாரம் என பல்வேறு துறைகள் உள்ளன. இந்தத்துறை களில் பணியாற்றுபவர்கள் கோரிக்கை வைக்கும் இடம் (அரசிடம் தான்) ஒன்று தான். துறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் ஓரணி யில் திரள்வதன் மூலமே கோரிக்கை களை வென்றெடுக்க முடியும். மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறைகளைப் பாதுகாக்க மின்வாரியத்தில் ஓய்வு பெற்றோர் தாங்கள் வசிக்கும் பகுதியில் “அர சியல் ரீதியாக களமாடி” பகுதி மக்க ளிடம் நாட்டின் நிலைமையை எடுத்துச் சொல்லி அவர்களை ஓரணி யில் திரட்ட வேண்டும் என்றார். மாநாட்டுக் கொடியை அமைப்பின் மாநிலத் தலைவர் என்.சின்னச்சாமி ஏற்றி வைத்தார். அஞ்ச லித் தீர்மானத்தை துணைத் தலை வர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் வாசித் தார்.  பிரநிதிதிகளை வரவேற்று வரவேற்புக்குழுச் செயலாளர்  வி.பிச்சைராஜன்  பேசினார்.  வேலை யறிக்கையை பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன் சமர்பித்தார். வரவு-செலவு அறிக்கையை ராம நாதன் டிஜிட்டல் மூலம் சமர்ப்பித் தார். முன்னதாக மின்வாரிய ஓய்வு பெற் றோர் நல அமைப்பினர் மாநாட்டு அரங்கிற்கு பேரணியாக வந்தனர். பேரணிக்கு செயலாளர் என்.செல்வராஜ் தலைமை வகித்தார்.

;