tamilnadu

img

விவசாய வேலைக்காக சென்னை வந்த மேற்கு வங்க இளைஞர் பட்டினியால் பலி

சென்னை, அக்.3- விவசாய வேலைக்காக சென்னை வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு வர் மூன்று நாட்களாக உணவில்லாமல் பட்டினி கிடந்து உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 நபர்கள்  கடந்த மாதம் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்த  நிலையில், மூன்று நாள் வேலை முடிந்தபின் வேலை இல்லாததால் அவர்களது சொந்த ஊருக்கே செல்வதற்காக செப்.13ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர். ஆனால், அவர்களில் 5 பேர் மட்டும் ஊருக்கு செல்லாமல் கடந்த 16ஆம் தேதி காலை வரையில் உண்பதற்கு உணவுகூட இல்லாமல், சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையிலேயே தங்கி இருந்துள்ளனர். மேலும், அவர்கள் 5 பேரும் உணவு இல்லாமல் பட்டினி கிடந்ததால் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், மயங்கி விழுந்த ஐந்து  நபர்களையும் மீட்டு உடனடியாக ராஜீவ்  காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர். மேலும், இவர்கள் குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த னர்.  இந்த விசாரணையில், பட்டினியால் மயங்கி விழுந்தவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மங்ருல் என்ற பகுதியைச் சேர்ந்த சமர்கான் (35), மாணிக் கோரி (50), சத்யா பண்டிட் (33),  ஆசித் பண்டிட் (35), கோனாஸ் ஸ்மித் (52)  என தெரிய வந்துள்ளது. இதற்கிடையே ஐந்து நபர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், மாணிக் கோரி, சத்யா பண்டிட், ஆசித் பண்டிட், கோனாஸ் ஸ்மித் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், சமர்கான் என்பவர்  மட்டும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில்,  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வும், பிரேதப் பரிசோதனைக்காக அவரது  உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் உள்ள பிணவறையில் வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சமர்கான் உடலுக்கு மாநில அமைச்சர் சி.வெ.கணேசன் மாலை அணித்து  மரியாதை செலுத்தினார். பின்னர்  மாநில அரசின் சார்பில் அவரது உறவினர்களிடம் நிவாரணத்தை வழங்கினார். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர்கள், உடலை மேற்கு வங்கத்திற்கு கொண்டுசென்றனர்.