மதுரை. டிச.4- மாநில அரசின் போட்டித் தேர்வுக ளுக்கு தமிழ்த்தாள் கட்டாயம் என்ற தமிழக அரசின் அரசாணையை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. தமிழக அரசுப் பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவன பணியிடங்களுக்கு தேர்வு முகமை யால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழிப் பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாய மாக்கப்படும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழே அறியாத வெளி மாநி லத்தைச் சேர்ந்தவர்களும் தமிழக அர சுத் துறைகள் மற்றும் மாநில பொ துத்துறை நிறுவன பணியிடங்களுக்கு தேர்வு செய்ய முடியும் என்ற அர சாணை வெளியிடப்பட்டதன் காரண மாக, தமிழக அரசுப் பணியிடங்க ளுக்கு பிற மாநிலத்தவர்களும் நிய மனம் பெறும் நிலைமை ஏற்பட்டது. தமிழ் ஆட்சி மொழி சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழே அறியாதவர்கள் தமிழக அரசு பணி யிடங்களில் நியமிக்கப்படுவது இயற்கை நீதிக்கு முரணானதாக இருந்தது. தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணை மூலம் தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாநி லங்களில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவன பணியிடங்களிலும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது. மேற்கண்டவாறு தமுஎகச மாநில தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராம லிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.